மறவா நினைவுகள் 😍😍😍spartanz V13
கண்களும் கடலாகுமே, மறவா நினைவினை
என் இதயச்சுவட்டில் பொருத்திய, spartanz நாட்களை நினைக்கையிலே,
வானமும் எட்டிவிடும்
தூரம் தான் என்று,
எங்கள் திறமைகளும் பல மேடைகளை
முட்டி பார்க்க ஆவல் இட்டது ;
கதிரவன் தன் ஒளி கதிரை
சுருக்கும் முன்பே ,
பயிற்சியின் அனல் பறக்கும்
ரெடி 5, 6, 7, 8 இன் ஒலி
LOGISTICS ஐ நிரப்பியது ;
பிடித்ததை பிடிக்க,
5 மணிக்கு கால்கள்
ஓட்டமிட்டன டீம் ரூம்க்கு ;
வியர்வை துளியினுள்
மூழ்கிய மேனிக்கு,
Red Building இன்
Chill தண்ணியே அருமருந்தானது ;
இரவில் கனவு என இருந்த எங்களை
இரவே கனவு என மாற்றிய
பல ஆர்பறிக்கும் மேடைகள் ;
இசையின் காதலர்களுக்கு,
கைத்தட்டலின் ஓசை
போதையைத் தந்தது ;
கனவுகள் தன் இலக்கை
அடைந்ததோ இல்லையோ !
கற்பனைகளுக்கு எல்லை என்றும்
ஒன்றுமில்லை ;
இருப்பினும் ஏதோ ஒன்றை
பிரிந்துவிட்ட உணர்வு!
மீண்டும் ஒருமுறையேனும் கிடைக்குமோ,
மீள முடியா நினைவுகளில்
வாழ்ந்த நாட்கள்??????????
Spartanz v13 😍😍😍2020
😍Joshi abi shiva achu nivi ruth nangs suji pravee sham viki jeya guhe😍
We can we will🤩🤩